மோந்தா புயல் எச்சரிக்கை - சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து
சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.) தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று (27.10.2025) அதிகாலை 02:30 மணியளவில் மோந்தா புயல் உருவானது. இன்று காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த புயல் இன்று (28.10.2025) மாலை அல்லது இரவு
மோன்தா புயல் எச்சரிக்கை - சென்னைக்கு வரும் விமானங்கள் இன்று ரத்து


சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)

தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று (27.10.2025) அதிகாலை 02:30 மணியளவில் மோந்தா புயல் உருவானது. இன்று காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த புயல் இன்று (28.10.2025) மாலை அல்லது இரவு நேரத்தில் மச்சூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையேயான ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மோந்தா புயலால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதாவது விசாகபட்டினத்தில் இருந்து காலை 09:45 மணிக்குச் சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று ராஜமுந்திரியில் இருந்து மதியம் 01:35 மணிக்குச் சென்னைக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வர உள்ள சில விமானங்களும் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b