Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 28 அக்டோபர் (ஹி.ச.)
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு சுற்று வட்டார பகுதிகள் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தொழில் செய்தும், தொழிலாளர்களாகவும் கூட்டமாகவும், குடும்பத்தினருடனும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநகரில் நாளுக்கு, நாள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்தே செல்கிறது. அதில் தங்க நகை, பணம், இருசக்கர வாகனம், ஹெல்மெட், பெட்ரோல், வாகனங்களில் உதிரி பாகங்களைத் தொடர்ந்து பழங்களை அடுக்கி வைத்து இருக்கும் குடைகள், பாக்ஸ்கள் மட்டும் இன்றி தற்பொழுது சிலிண்டரையும் அலேக்காக அபேஸ் செய்யும் சம்பவமும் அரங்கேறி உள்ளது.
கோவை உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இண்டேன் கேஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிலிண்டர்கள் அப்பகுதி வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கு ஒரு இடத்தில் அடுக்கி வைத்து இருந்தனர்.
இந்நிலையில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிலிண்டர்கள் அடுக்கி வைத்து இருந்ததை பார்த்து அங்கும், இங்கும் நோட்டமிட்டு அலேக்காக சிலிண்டர் ஒன்றே தூக்கிக் கொண்டு அபேஸ் செய்து இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அது அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.
அந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan