Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
தி.மு.க. இளைஞர் அணிக்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகள் நியமனம் தற்போது நடைபெற்றுவருவதாக திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று (அக் 28) கூறியிருப்பதாவது,
சட்டமன்றத் தொகுதிதோறும் நம் தி.மு.க. இளைஞர் அணிக்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிளை வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சூழ்ச்சிகளை வீழ்த்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெல்ல பணியாற்றவிருக்கும் இளம் நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b