மோந்தா புயல் கரையை கடக்கும் போது காக்கிநாடா துறைமுகம் கடுமையான பாதிப்புக்கு உட்படக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
காக்கிநாடா, 28 அக்டோபர் (ஹி.ச.) வங்கக் கடலில் மோந்தா புயல் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் 10-ம் எண்(பெரிய அபாயம்) புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறை முகம் அருகே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்
காக்கிநாடா துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


காக்கிநாடா, 28 அக்டோபர் (ஹி.ச.)

வங்கக் கடலில் மோந்தா புயல் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் 10-ம் எண்(பெரிய அபாயம்) புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

துறை முகம் அருகே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் துறைமுகம் கடுமையான பாதிப்புக்கு உட்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்ந்து விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 9-ம் எண் (அபாயம்) புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம், கிருஷ்ணாபட்டினம், வடவேறு துறைமுகங்களில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மோந்தா புயல் காரணமாக காக்கிநாடா மாவட்டம் உப்பாடாவில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கனமழை காரணமாக மழைப்பாதை சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மோந்தா புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் கரையை கடக்கும் போது 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மசூலிப்பட்டினத்தில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 240 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இன்று (அக் 28) மாலை அல்லது இரவு தீவிர புயலாக மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

Hindusthan Samachar / vidya.b