மாதா கோவில் வளாகத்தில் முகம் சிதைந்த நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
கள்ளக்குறிச்சி, 28 அக்டோபர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தில் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கிய ஜோ(வயது 20). இந்த இளைஞர் நேற்று இரவு நண்பர்கள் சிலருடன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது இந்த நிலைய
Death


கள்ளக்குறிச்சி, 28 அக்டோபர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தில் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கிய ஜோ(வயது 20).

இந்த இளைஞர் நேற்று இரவு நண்பர்கள் சிலருடன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இரவு அந்தோணி ஆரோக்கிய ஜோ, வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்குள்ள மாதா கோவில் வளாகத்தில் அந்தோணி ஆரோக்கிய ஜோ உடலில் ரத்த காயங்களுடன் முகம் சிதைந்த நிலையில் இன்று காலை சடலமாக கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து சென்ற திருநாவலூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் இறந்து கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்தோணி ஆரோக்கிய ஜோ உடன் நேற்று திங்கட்கிழமை இரவு சென்ற இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நண்பர்களுக்குள் திடீரென ஏற்பட்ட தகராறில் அந்தோணி ஆரோக்கிய ஜோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN