நடிகர் கமல்ஹாசன் நடித்த நாயகன் ரி- ரிலீஸ் உரிமம் தந்து பண மோசடியில் ஈடுபட்டதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.) நடிகர் கமல்ஹாசன் நடித்த நாயகன் ரி- ரிலீஸ் உரிமம் தந்து பண மோசடியில் ஈடுபட்டதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பபட விநியோகஸ்தரும், தயாரிப்பு நிறுவனம்
Naayagan


சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)

நடிகர் கமல்ஹாசன் நடித்த நாயகன் ரி- ரிலீஸ் உரிமம் தந்து பண மோசடியில் ஈடுபட்டதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்பபட விநியோகஸ்தரும், தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவருமான எஸ்.ஆர்.ராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவன உரிமையாளர் மதுராஜ் என்பவர் கடந்த 2023ஆம் வருடம் அறிமுகம் கிடைத்தது. நடிகர் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம் ரி ரிலீஸ் உரிமம் தன்னிடம் இருப்பதாக மதுராஜ் பேசி நம்ப வைத்தார். சினிமாவில் முன் அனுபவம் இல்லாத நான் அவரின் ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்தார்.

விநியோக உரிமைகளை வாங்கிக் கொள்ள சம்மதித்தேன். அதற்காக அவர் என்னிடம் ரூபாய் 35 லட்சம் என விலை பேசி இதர செலவுகளை செய்வதற்காக பணம் அவரிடமே ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை போட்டார்.

முதற்கட்டமாக ரூபாய் 15 லட்சம் வங்கி கணக்கு வாயிலாக பெற்றுக் கொண்டார்.

நான் நாயகன் படத்தை வாங்கி டிஜிட்டலைஷ்ஷாக மாற்றி விளம்பரப்படுத்தும் பணியை செய்து கொண்டிருந்தோம். அப்போது எனக்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அதனால் பணிகள் நின்று விட்டது. இதனால் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் மதுராஜிடம் பணிகளை தொடரும்படி கூறி விட்டு பெங்களுருக்கு சென்று விட்டேன்.

இந்த நிலையில் நாயகன் படத்தை வேறொருக்கு ரி ரிலீஸ் உரிமத்தை கொடுத்து என்னை ஏமாற்றி விட்டார். அடுத்த மாதம் 6 ஆம் தேதி நாயகன் ரி ரிலீஸ் என்று வேறொரு நிறுவனம் அறிவித்திருப்பதை கண்டே நாங்கள் ஏமாற்றப்படோம் என்பது தெரிய வந்தது. 2035 வரை இந்த படத்தின் உரிமம் எங்களிடம் தான் இருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். இது போன்ற மோசடியில் ஈடுபட்ட மதுராஜிற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு கொடுக்க கூடாது.

கமல் ரசிகன் என்பதாலேயே படத்தை வாங்கினேன். ஆனால் ஏமாற்றப்பட்டு விட்டேன் என்று எஸ்.ஆர். ராஜன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ