Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 28 அக்டோபர் (ஹி.ச.)
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பீகாரைப் போல வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளுக்கு தமிழகம், கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (அக் 28) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு நமது ஜனநாயக செயல்முறைக்கு அவமானமாகும்.
காலாவதியான பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு, உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக இதை அவசரப்படுத்துவது கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இந்த முயற்சியை கேரளா உறுதியாக எதிர்க்கிறது மற்றும் அதைப் பாதுகாக்க ஒன்றுபட்ட எதிர்ப்பைக் கோருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b