Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
இந்த காலக்கட்டத்தில் அனைவரது கைகளிலும் மொபைல் போன்கள் உள்ளன. இது இல்லாமல் நாள் தொடங்குவதும் இல்லை, முடிவடைவதும் இல்லை. அந்த அளவிற்கு நம் அன்றாட வாழ்வில் மொபைல் போன்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்றே சொல்லலாம்.
ஆனால், பலர் தங்கள் ஸ்மார்ட் போன்கள் தண்ணீரில் விழுந்தால், இனி வேலை செய்யாது என்று நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு சில எளிய டிப்ஸ்கள் உள்ளன. அதுப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்பாராத விதமாக உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால், நீங்கள் முதலில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தொலைபேசியை உடனடியாக தண்ணீரிலிருந்து வெளியே எடுப்பது தான்.
நீண்ட நேரம் மொபைல் போன் தண்ணீரில் கிடந்தால், உள்ளே இருக்கும் டிவைஸ்கள் சேதமடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகையால், உடனடியாக செயல்படுவது சிறந்தது.
அடுத்தபடியாக, தண்ணீரில் இருந்து மொபைல் போனை வெளியே எடுத்தவுடன் முதலில் அதை ஆஃப் செய்ய வேண்டும்.
போனை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டாம். ஏனென்றால், உள்ளே ஈரப்பதம் இருந்து மின்சாரம் தொடர்ந்து பாய்ந்தால், அது ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தலாம். அதனால்தான் போனை முழுவதுமாக அணைப்பது மிகவும் முக்கியம்.
இதை தொடர்ந்து, மொபைலில் இருந்து சிம் கார்டு ட்ரே, சிம் கார்டு, மெமரி கார்டு போன்றவற்றையும் அகற்ற வேண்டும். இவற்றை அகற்றுவது காற்று உள்ளே செல்ல அனுமதிக்கும். இது உலர்த்துவதற்கும் உதவுகிறது. இது தொலைபேசியின் உள்ளே இருக்கும் ஈரப்பதத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலர்ந்த, மென்மையான துணியால் உங்கள் தொலைபேசியை மெதுவாக துடைக்கலாம். ஸ்பீக்கர்கள், சார்ஜிங் போர்ட்கள் போன்ற பகுதிகளில் கவனமாக துடைக்க வேண்டும்.
அதே போல், தொலைபேசியை சிறிது சுழற்றுவது அல்லது சாய்ப்பது நீர்த்துளிகளை வெளியிட உதவும்.
மேலும், போனை உடயே பயன்படுத்த தொடங்க வேண்டாம். அது முற்றிலும் வறண்டுவிட்டதா என்பதை உறுதி செய்திவிட்டு பயன்படுத்த வேண்டும் அல்லது சார்ஜ் போட வேண்டும்.
ஏனென்றால், ஈரப்பதம் இன்னும் உள்ளே இருந்தால், மின்சாரம் உள் கூறுகளை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. ஆகையால், நிதானமாக செயல்படுவது அவசியம்.
Hindusthan Samachar / JANAKI RAM