Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 28 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக அரசை கண்டித்தும், 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கறிக்கோழி வளர்ப்பு சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்தபடி தென்காசி மாவட்ட அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அதாவது, தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச் சங்கத்தின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரனிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், முன்னதாக தமிழக அரசை கண்டித்தும், தற்போதைய தமிழக முதல்வராக உள்ள மு.க .ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அந்த கிராம சபை கூட்டத்தில் அளித்த மனுக்களுக்கு தான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 நாட்களில் தங்களது குறைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்று நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஏன்?
என்று கேள்வி எழுப்பிய விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி படி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN