Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை கண்ணகி நகர் எழில் நகரை இணைக்கும் சாலை கோகிலாம்பாள் நகர் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாய் காணப்படுகிறது.
இதனை பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தராஜன் ஆய்வு செய்து மழை நீர் வடிகால்வாய் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை செளந்தராஜன்:-
கண்ணகி நகர் மக்கள் சுமார் 45000 குடும்பங்கள் இந்த சாலை வழியாக தான் போக வேண்டும், சாலை எப்படி இருக்கு, மழை நீர் வடிகால்வாய் எப்படி இருக்கு,
முதல்வர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்தால் தான் தெரியும்,
மக்கள் எவ்ளோ கஷ்டபடுகிறார்கள், சிரமபடுகிறார்கள் என்பது தெரிகிறது சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த பகுதி பற்றி கவலையே இல்லை, இதை சரிசெய்ய கேட்டுக் கொள்கிறேன்.
டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. மழை தேங்கிய தண்ணீரில் தான் டெங்கு வரும், 5 முறைக்கு மேல் ஆட்சி செய்தாச்சு, இதே சட்டமன்ற உறுப்பினர் திருப்பி திருப்பி வெற்றி பெற்றாச்சு, பிறகு ஏன் இதை சரிசெய்யபடவில்லை ஆட்சி மாற்றம் வர வேண்டும் அது ஒன்று தான் வழி என்றார்.
Hindusthan Samachar / Durai.J