Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 28 அக்டோபர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாநகரின் கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமம் எதிரே ஆரோ உஷா ஓட்டலில் பணியாற்றுவதற்காக ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டம் நரனகரா கிராமத்தைச் சேர்ந்த பருவபிரசாத்பத்ரா என்ற இளைஞர் கடந்த டிசம்பர் 2009 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்துள்ளார்.
இந்த ஹோட்டலின் உரிமையாளர் உஷாராணி பட்நாயக், பீட்டர் ஆண்ட்ரூசன் என்ற வெளிநாட்டினரை திருமணம் செய்து இரண்டு மகன்கள் உள்ளன. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வந்த நிலையில் திருவண்ணாமலையில் ஆதார் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் பெறுவதற்காக, 2012 ஆம் ஆண்டு அந்த ஓட்டலின் உரிமையாளர் உஷாராணி பட்நாயக் என்பவரை அவரது கணவர் பீட்டர் ஆண்டர்சன் ஹோட்டலில் பணியாற்றி வந்த பருவபிரசாத்பத்ராவுக்கு மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 2017 இல் உஷாராணி பட்டுநாயக் மகன் ஹன்ஸ்ராஜ், பருவபிரசாத்பத்ரா திருவண்ணாமலையில் இருக்கக் கூடாது என மிரட்டி அனுப்பியதால் அவர் பாண்டிச்சேரியில் உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு உஷாராணி பட்நாயக்கின் முதல் கணவர் பீட்டர் ஆண்டர்சன் உயிரிழந்துள்ளார்.
பின்னர் பருவபிரசாத்பத்ரா வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள ஓடிசா மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளார். அதனை அறிந்த உஷாராணி பட்நாயக், குர்தா மாவட்டம் ஜங்கியா காவல் நிலையத்தில் நிச்சயதார்த்தம் குறித்து புகார் அளித்து பருவாபிரசாத்பத்ராவை 3 நாள் சிறையில் அடைத்துள்ளார்.
பின்னர் பிணையில் வெளியே வந்த பருவபிரசாத்பத்ராவை ஆசை வார்த்தை கூறி நாம் ஒன்றாக வாழலாம் என்று கூறினார். திடீரென உன்னை பழி வாங்கத்தான் இப்படி நீதிமன்றத்தில் கூறினேன், பொய் கூறி சாதகமாக தீர்ப்பு வரச்செய்தேன், இந்த ஜென்மத்தில் உனக்கு விவாகரத்து தர மாட்டேன், சேர்ந்து வாழ மாட்டேன்,உன்னுடைய பெற்றோரையும் பார்த்துக்கொள்ள மாட்டேன் என்று அடித்து வெளியே தள்ளியுள்ளார்.
பின்னர் 2025 இல் திருவண்ணாமலை குடும்ப நல நீதிமன்றம் சேர்ந்து வாழ தீர்ப்பு வழங்கியது. எனவே கோட்டம்பாளையம் கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கிக் கொள்வதற்கு வீடு, ஒரு கார் கொடுத்துள்ளனர், அடுத்த ஒரு வாரத்தில் கார் சாவியை பிடுங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தை கொடுத்துள்ளார்.
அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே போ என்றும் மிரட்டியுள்ளார் கடந்த 2 ஆம் தேதி பருவபிரசாத்பத்ரா தங்கி இருந்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் மேலே ஒரு பூட்டை போட்டு உள்ளே செல்லாதவாறு செய்துள்ளார். பருவபிரசாத்பத்ரா அந்தப் பூட்டினை உடைத்து உள்ளே சென்று தனது உடமைகளை துணிமணிகளை எடுத்துக்கொண்டு வெளியேறி சென்றுள்ளார்.
பின்னர் உஷாராணி பட்நாயக் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணங்களை திருடியதாகவும் பல்சர் பைக் திருடியதாகவும் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தாலுகா காவல் நிலையத்தில் பல்சர் பைக்கை ஒப்படைத்து விட்டு, காவல்துறையினர் கணவன் மனைவிக்குள் இருக்கிற சண்டையை நீதிமன்றம் சென்று தீர்வு காணுங்கள் எனக்கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உஷாராணி பட்நாயக் பேஸ்புக் பக்கத்தில் பருவபிரசாத்பத்ராவின் போட்டோவை போட்டு, எனது வீட்டின் பூட்டை உடைத்து திருடுகிறான், எனது வீட்டை தீயிட்டு கொளுத்தி விட்டான் என தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்.
நீதிமன்ற உத்தரவைப் பெற்று சேர்ந்து வாழாமல் உள்ள தனது மனைவியை, தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும், இல்லையென்றால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வாங்கி தர வேண்டும் என கூறி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவபிரசாத்பத்ரா புகார் அளித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN