Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 28 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உருளிக்கல் கீழ் பிரட்டு பகுதியில் ஸ்ரீ பூ மாரி அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகும்.
2 மணி அளவில் அப்பகுதியில் 9 யானை கொண்ட கூட்டம் கோவிலின் இரும்பு கதவை உடைத்து அதில் உள்ள பொருட்களை எல்லாம் வெளியே இழுத்து சேதப்படுத்தி உள்ளது.
உடைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வந்து பார்த்தபோது, கோவிலின் கருவறை வரையிலும் ஒன்பது யானை நிற்பதைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர்
உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்பு அதனை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டி அடித்தனர். மேலும் வால்பாறை பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் வனவிலங்கு மோதல் தடுப்பு காவலர்களை அதிக அளவில் நியமனம் செய்து யானைகள் குடியிருப்பு பகுதியில் வர வண்ணம் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN