Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 28 அக்டோபர் (ஹி.ச.)
கோவை சிட்டிசன்ஸ் ஃபோரம் சார்பில் கொடிசியா அரங்கில் தொழில் துறையினருடன் நடைபெறும் சந்திப்பில் துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை,அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர்.
துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் பேச்சு,
பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சென்னைக்கு முதலில் வருவதாக இருந்தது..
ஆனால் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு நேராக கோவை வந்து உள்ளேன்.
வெற்றி தோல்வி என்பது மாறிமாறி வரும்.
என்னுடைய உயர்வுக்கு காரணமான என்னோடு களத்தில் மற்றும் தோளோடு தோள் நின்ற கோவை பகுதி மக்களுக்கு வணக்கம்.
துணை ஜனாதிபதி பதவி என்பது எனக்கு கிடைத்த மரியாதை அல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கோவைக்கும் கிடைத்த மரியாதை.
யார் வந்தாலும் அன்போடு அரவணைக்கும் கோவை.
எந்த பிரச்சனை வந்தாலும் இப்போதும் உங்களோடு ஒருவனாக இருப்பேன்.
இவ்வாறு துணை ஜனாதிபதி பேசினார்.
Hindusthan Samachar / V.srini Vasan