Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 28 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (அக் 28) கோவைக்கு வருகை தந்து உள்ளார்.
கோவை விமான நிலையம் வந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் தொழிலதிபர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்குப்பின் பிற்பகல் 12:15 மணிக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் (சர்க்யூட் ஹவுஸ்) மதிய உணவு, ஓய்வு பின்னர் 2.30 மணி அளவில் பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு பேரூரில் இருந்து புறப்பட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூர் செல்கிறார்.
துணை ஜனாதிபதி வருகை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b