Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 28 அக்டோபர் (ஹி.ச.)
கோவை, பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அ.தி.மு.க கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவிசரவணகுமார் என்பவர் அவரது மனைவி 47 வயதான மகேஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தாளியூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர்களது வீட்டில் ஓட்டுனராக 45 வயதான சுரேஷ் என்பவர் பணி புரிந்து வந்து உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல கவிசரவணகுமார் வெளியே சென்று உள்ளார். அவரது குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று உள்ளனர்.
இந்த அடுத்து வீட்டில் தனியாக இருந்த மகேஷ்வரியை திடீரென இன்று கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு வடவள்ளி காவல் நிலையத்தில் சரண் அடைந்து உள்ளார் ஓட்டுநர் சுரேஷ்.
இதனை தொடர்ந்து வடவள்ளி போலீசார் தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தடாகம் போலீசார் சம்பவம் இடமான தாளியூருக்கு சென்றனர். அங்கு வீட்டினுள் உள்ள இறந்த மகேஸ்வரியின் உடலை காவல் துறையினர் கைப்பற்று விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த தகவல் அறிந்து உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வீட்டின் முன்பு கூடி உள்ளனர்.
அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலரின் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan