இன்று கான்பெர்ராவில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டி
கான்பெர்ரா, 29 அக்டோபர் (ஹி.ச.) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலா
இன்று கான்பெர்ராவில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டி


கான்பெர்ரா, 29 அக்டோபர் (ஹி.ச.)

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

உலக சாம்பியனான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களம் இறங்குகிறது. ஒரு நாள் தொடருடன் ஒப்பிடும் போது இது முற்றிலும் மாறுபட்ட அணியாகும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு வலுவான அணியை உருவாக்கும் திட்டத்திற்கு, அச்சாரமாக இந்த தொடர் அமையும்.

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Hindusthan Samachar / JANAKI RAM