விவசாயி தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் -சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்து நடவடிக்கை!
கோவை, 29 அக்டோபர் (ஹி.ச.) பொள்ளாச்சி அடுத்துள்ள குப்புச்சிபுதூர் மேட்டுப்பதி அருகே தனியார் தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை சிசிடிவி மூலம் பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத
A leopard was spotted roaming in a farmer's garden. The forest department has taken action by setting up a cage to catch the leopard


A leopard was spotted roaming in a farmer's garden. The forest department has taken action by setting up a cage to catch the leopard


கோவை, 29 அக்டோபர் (ஹி.ச.)

பொள்ளாச்சி அடுத்துள்ள குப்புச்சிபுதூர் மேட்டுப்பதி அருகே தனியார் தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை சிசிடிவி மூலம் பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்க் கொண்டு சிறுத்தை பிடிக்க நடவடிக்கை மேற்க்கொண்டனர்.

சிறுத்தை நடமாட்டம் செய்த பகுதியான மேட்டுபதி பகுதியில் வனத்துறையினர் நேற்று மாலை கூண்டு வைத்தனர். விவசாயிகளை அச்சத்தை ஏற்படுத்திய சிறுத்தை பிடித்து அடந்த வனப்பகுதியில் விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ஐந்து பேர் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து சிறுத்தையை பிடிக்க தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / V.srini Vasan