Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள 111 ஏக்கர் பரப்பளவு, 3.8 கி.மீ நீள ரேஸிங் டிராக்கில் நடிகர் அஜித் குமார்,பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனை சந்தித்தார்.
அங்கு கோ கார்ட்டிங் வாகனத்தை அஜித் இயக்கிப் பார்த்தார்.இருவரும் ரேஸிங் தொழில்நுட்பம் குறித்து உரையாடினர்.
இந்த சந்திப்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்திய மோட்டார் விளையாட்டை வளர்த்தெடுக்கவும் புதிய பந்தயத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan