Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 29 அக்டோபர் (ஹி.ச.)
புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
இந்த தீபாவளி பரிசு தொகுப்பில் சர்க்கரை 2 கிலோ, சூரியகாந்தி எண்ணெய் 2 லிட்டர், கடலை பருப்பு ஒரு கிலோ ரவை, மைதா ஆகியவை வழங்கப்படுகிறது.
இதன் மதிப்பு ரூ.585 ஆகும். இவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க விழா காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாளர் தெரு, நலன் குளம் தெரு, தேனூர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடையில் தீபாவளி பரிசு தொப்பை பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J