Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)
பஹ்ரைன் நாட்டில் கடந்த 19-ஆம் தேதி முதல் ஆசிய இளையோருக்கான விளையாடு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் 19 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
மொத்தமாக இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
அதில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த எட்வினா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயம் மற்றும் மெட்லி ரிலேவில் இந்திய அணியின் ஒரு பகுதியாக இரண்டிலும் வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில் பதக்கங்களுடன் சென்னை திரும்பிய எட்வினாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெள்ளி பதக்கம் வென்ற எட்வினா கூறுகையில்,
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற மூன்றாவது இளையோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று 400 மீட்டர் ரிலே, மெட்லி ரிலே ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி பதக்கம் வென்று சென்னை வந்துள்ளேன்.
இது எனது முதல் சர்வதேச பதக்கம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் எனக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பாக எனக்கு இத்தனை நாட்களாக உறுதுணையாக இருந்தனர்.
மேலும் எனது பயிற்சியாளர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இவர்கள் இல்லை என்றால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.
எனது தந்தை டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இருந்தபோதிலும் எனது பெற்றோர்கள் எனக்கு ஊக்கம் அளித்தனர்.இதனால் தான் என்னால் இந்த போட்டியில் வெல்ல முடிந்தது.
மேலும் இந்திய நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்க வெல்ல வேண்டும் என்பது எனது லட்சியம். தொடர்ந்து தமிழக அரசு உதவி அளிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.
பயிற்சியாளர் மகேஷ் குறுகையில்,
எங்களது சின்ன கிராமத்திலிருந்து இது நான்காவது சர்வதேச பதக்கம் வென்று உள்ளோம். எங்கள் கிராமத்தில் மூர்த்தி என்கிற உடற்கல்வி ஆசிரியர் தான் எங்களுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்து நாங்கள் இவ்வளவு தூரம் வருவதற்கு காரணமாக இருந்தார் அவருக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என கூறினார்.
Hindusthan Samachar / Durai.J