Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழையின் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தது.
இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்
(கே.ஆர்.எஸ்) மற்றும் கபினி ஆகிய 2 அணைகளும் இந்த ஆண்டு 4-வது முறையாக நிரம்பின.
6-வது நாளான நேற்றும்(அக் 28) கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவான 124.80 அடியுடன் இருந்தது.
இந்தநிலையில், நேற்று கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 328 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 392 கனஅடியாக அதிகரித்தது.
இதேபோல், நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 72 கனஅடியாக இருந்த தண்ணீர் திறப்பு இருந்த தண்ணீர் திறப்பு நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 135 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
கபினி அணைக்கு நேற்றுமுன்தினம் வினாடிக்கு ஆயிரத்து 851 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு ஆயிரத்து 278 கன அடியாக குறைந்தது.
இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் வினாடிக்கு ஆயிரத்து 350 கனஅடி திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலை வினாடிக்கு 1000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 2,283.84 ஆக இருந்தது.
அதுவே நேற்று சற்று குறைந்து 2,283.82 அடியாக இருந்தது. இந்தநிலையில், இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 7 ஆயிரத்து 135 கனஅடி நீர் தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 420 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் மழை பொழிவு காரணமாக நேற்று சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b