ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என்று இடையீட்டு மனு தாக்கல்
புதுடில்லி, 29 அக்டோபர் (ஹி.ச.) பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என்று இடையீட்டு மனு தாக்கல்


புதுடில்லி, 29 அக்டோபர் (ஹி.ச.)

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.

இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரியும், ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து கடந்த மாதம் 10-ந்தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சார்பில் வக்கீல் ராகுல் ஷியாம் பன்டாரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவில்,

கரூர் கூட்டநெரிசல் வழக்கில் உத்தரவிட்டது போல, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியின் தலைமையில் கண்காணிக்க உத்தரவிட வேண்டும்.

கொலை வழக்கில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யவேண்டும்.

என்று கோரியுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM