டெட்டனேட்டர் குச்சிகளுடன் ஆட்டோவில் வலம் வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது
திண்டுக்கல், 29 அக்டோபர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடக்கு தாதநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒருவர் குவாரியை நடத்தி வருகிறார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த திருச்சூர் பகுதியை
Arrest


திண்டுக்கல், 29 அக்டோபர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடக்கு தாதநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒருவர் குவாரியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லிஜோபி ,ஜோபின் ,கிரீஸ் மூன்று பேர் கேரளா மாநில பதிவை கொண்ட ஆட்டோவில் நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வலம் வந்துள்ளனர்.

அப்போது போலீசார் ரோந்து பணியின் போது ஆட்டோவில் நிறுத்தி விசாரணை செய்ததில் கல் குவாரிகளுக்கு வெடிக்க பயன்படுத்தப்படும் 25 டெட்டனேட்டர் குச்சிகள் கொண்ட ஆட்டோவில் மறைத்து வைத்திருந்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணையில் கேரள மாநிலத்திற்கு எடுத்து சென்றதாகவும், இதை நாங்கள் மீன் பிடிக்க பயன்படுத்துவதாகவும் கூறி முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.

இதனை எடுத்து அனுமதி இல்லாத டெட்டனைட்டர் குச்சிகளுடன் வந்த மூன்று கேரளா பதிவின் கொண்ட ஆட்டோவை பறிமுதல் செய்தும், மூன்று நபர்களை கைது செய்த தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN