எக்ஸல் கல்வி நிறுவனத்தில் உணவு உட்கொண்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
நாமக்கல், 29 அக்டோபர் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள எக்ஸல் கல்வி நிறுவனத்தில் உணவு உட்கொண்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உணவு சாப்பிட்ட பல்வேறு மாணவ, மாணவிகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற
Excel College


நாமக்கல், 29 அக்டோபர் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள எக்ஸல் கல்வி நிறுவனத்தில் உணவு உட்கொண்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

உணவு சாப்பிட்ட பல்வேறு மாணவ, மாணவிகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மாணவர்கள் ஒரு சிலருக்கு கல்லூரியின் உள்ளே செயல்படும் கிளினிக்கில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையில், அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சோதனை முடிவுகள் வெளிவரும் வரை கல்லூரி செயல்பாடுகளுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கல்லூரியில் செயல்படும் உணவகங்கள் சமையல் கூடங்கள் முறையான வழிகாட்டி மற்றும் நெறிகள் பின்பற்றி சான்றிதழ் பெறப்பட்ட பின்னரே கல்லூரி திறக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை வலியுறுத்தி உள்ளது.

மாணவர்களுக்காக உணவு தயாரிக்கும் கூடத்தில், உணவே சமைக்க முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

மாணவர்கள் குடிப்பதற்காக பயன்படுத்தப்படும் குடிநீர் தொட்டி முழுவதும் அசுத்தமாகவும், புழுக்கள் நிறைந்ததாகவும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக, எக்ஸல் கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை அளித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN