Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 29 அக்டோபர் (ஹி.ச.)
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள் அவர்களுக்கு சில கட்டளைகள் வரும்பொழுது இந்த கட்டளைகளை பின்பற்றக்கூடிய சூழ்நிலை வருகிறது.
எப்படிப்பட்ட ஆணைகளை தேர்தல் ஆணையம் மூலம் சொல்லப்பட்டது என்று தெரியாது.
தேர்தல் ஆணையம் மற்றும் தவறான விஷயங்களை சொல்லிவிட்டால் அதிலிருந்து பாதிக்கப்படுபவர்களுக்கு காப்பாற்ற வேண்டும்.
எஸ்ஐஆர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை நவம்பர் இரண்டாம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் இதுகுறித்து முடிவெடுப்பார்.
சிறுபான்மையினரையும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் எஸ் ஐ ஆர் மூலம் ஈடுபட உள்ளனர்.
பீகாரில் இதுபோன்றுதான் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்க்கக்கூடிய எண்ணிக்கை லட்சத்திலிருந்து கோடி கணக்கில் வந்துள்ளது.
அவர்களுக்கு இங்கு வாக்காளர்களாக கொடுக்கும் பொழுது தமிழ்நாடு சூழ்நிலையில் வட மாநில சூழ்நிலையும் அவர்களுக்கு தெரியாது... அதனால் தமிழ்நாட்டில் நிலவரத்தை தெரியாதவர்களை வாக்காளர்களுடன் சேர்க்கக் கூடாது என்பதுதான் எங்களது நோக்கம்.
விஜய்க்கு உரிய எதிர்ப்பை அந்த வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்தி உள்ளார தவிர பொதுமக்கள் மத்தியில் வெறுப்பு இல்லை,
பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நாங்கள் இழப்பீடு கொடுத்து வருகிறோம்.
வருகின்ற 2026 தேர்தலில் பாஜக தான் காணாமல் போகுமே தவிர திமுக இல்லை திமுகவின் 2.0 ஆட்சி 2026 இல் அமையும்.
நயினார் நாகேந்திரன் அவருக்கு கொடுத்த தலைவர் என்ற பதவியை தக்க வைப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசி வருகிறார், புதிய கூட்டணிகள் அவர்களிடத்தில் செல்ல போவதில்லை. என்றார்
Hindusthan Samachar / Durai.J