SIR குறித்த தீமையை எடுத்துக் கூறி தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளங்க வைக்கிறார் என்பது பாஜகவினரை பதற்றம் அடைய வைத்திருக்கிறது - அமைச்சர் சிவசங்கர்
சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.) சென்னை பெரம்பூர் கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள பெரம்பூர் பணிமனையை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மேயர் பிரியா, வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,
Sivasankar


சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை பெரம்பூர் கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள பெரம்பூர் பணிமனையை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மேயர் பிரியா, வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, உள்ளிட்டோர் ஆய்வு செய்த பின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,

பெரம்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டது.

பணிமனையில் தேவைக்கு அதிகம் இடம் இருந்தால் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் இடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

SIR என்றாலே திமுகவுக்கு பதற்றம் ஏற்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது குறித்த கேள்விக்கு,

SIR கொண்டு வந்து பீகாரில் எவ்வளவு பிரச்சனைக்குரிய செயல்பாடுகளை செய்திருக்கிறார்கள் என்பதை நாடே அறியும். அதை அவர்கள் ஆதரிக்கத்தான் செய்வார்கள் அதன் தீமையை எடுத்துக் கூறி தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளங்க வைக்கிறார் என்பது அவர்களுக்கு பதற்றம் அடைய வைத்திருக்கிறது.

மின்சார பேருந்துகளை தனியார் மையம் ஆக்குவது நஷ்டத்தை ஏற்படுத்தும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு,

அவருக்கு இது தொடர்பான புரிதல் இல்லை இது குறித்து ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிறோம்.

மின்சார பேருந்து அதிக விலை கொண்டது. அதை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து பெரும் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும் அது மட்டும் இன்றி அவற்றை இயக்குவதற்கும் பராமரிப்பதற்குமான பணியாளர்கள் நம்மிடம் இல்லை.

நம்மிடம் பணிபுரிபவர்கள் டீசல் மெக்கானிக் சார்ந்தவர்கள் அதிக விலை கொண்ட மின்சார பேருந்தில் சிறிய தவறு என்றாலும் மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.

பேருந்து தயாரிப்பாளர்களை அவர்களின் நிறுவனத்தின் மூலம் இயக்குவதற்கு டெண்டர் தயாரிக்கப்பட்டு வெளிப்படையான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அவர் அரசியல் காரணங்களுக்காக இப்படி பேசி வருகிறார்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு பண பலன்களை இரண்டு தவணைகளாக கொடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்ற கேள்விக்கு,

சமீபத்தில் 1300 கோடி ஓய்வு பெற்ற பணியில் இருக்கும் போது இறந்த குடும்பத்தினருக்கு பண பலன்கள் வழங்கப்பட்டன.

மீதம் இருப்பவர்களுக்கு முதல் தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது மற்றொரு தவணை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்கப்படும்.

Hindusthan Samachar / P YUVARAJ