ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியுடன் பிரதமர் மோடி உரையாடல்
புதுடெல்லி, 29 அக்டோபர் (ஹி.ச.) ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராகவும், அந்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகவும் அண்மையில் சனே தகைச்சி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஏற்கெனவே பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியுடன் பிரதமர் மோடி உரையாடல்


புதுடெல்லி, 29 அக்டோபர் (ஹி.ச.)

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராகவும், அந்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகவும் அண்மையில் சனே தகைச்சி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஏற்கெனவே பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய பிரதமர் சனே தகைச்சியுடன், மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

அது குறித்து இன்று

(அக் 29) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் சனே தகைச்சியுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் பிரதமர் பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா - ஜப்பான் உறவை மேம்படுத்துவது குறித்த சிந்தனைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.

இருநாடுகளின் பொருளாதார பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு, அறிவுசார் பங்களிப்பு குறித்து ஆலோசித்தோம். இருவருமே, உலக அமைதி, ஸ்திரத்தன்மை, மற்றும் வளத்தை உறுதி செய்வதில் இந்தியா - ஜப்பானின் வலுவான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் உடன்பட்டோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b