ரபேல் போர் விமானத்தில் பயணித்த அனுபவம் மறக்க முடியாதது - ஜனாதிபதி திரௌபதி முர்மு பெருமிதம்
அம்பாலா, 29 அக்டோபர் (ஹி.ச.) பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன. ஏப்ரல் 22ம் தேதி நடந்த கொடூரமான
ரபேல் போர் விமானத்தில் பயணித்த அனுபவம் மறக்க முடியாதது -  ஜனாதிபதி திரௌபதி முர்மு பெருமிதம்


அம்பாலா, 29 அக்டோபர் (ஹி.ச.)

பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.

ஏப்ரல் 22ம் தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூரின் போது ரஃபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், ஆபரேசன் சிந்தூர் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததை பெருமைப்படுத்தும் விதமாக அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (அக் 29) பயணம் மேற்கொண்டார்.

இப்பயணம் குறித்து வருகையாளர் புத்தகத்தில் எழுதிய பதிவில் திரௌபதி முர்மு கூறியிருப்பதாவது,

இந்திய விமான படையின் ரபேல் போர் விமானத்தில் இன்று முதன்முறையாக பறந்து சென்றது எனக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

இந்த முதல் போர் விமான பயணம் ஆனது, தேசத்தின் பாதுகாப்பு திறன் பற்றிய ஒரு புதிய பெருமைக்குரிய உணர்வை என்னுள் ஏற்படுத்தியது.

இதனை வெற்றியுடன் நடத்தி முடித்ததற்காக, இந்திய விமான படை மற்றும் அம்பாலாவின் விமான படை தளத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் அவரிடம், ரபேல் போர் விமானம் மற்றும் இந்திய விமான படையின் செயல் திறன்களை பற்றி விரிவாக எடுத்து கூறப்பட்டது.

இந்திய குடியரசுத் தலைவர் அலுவலத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் ரபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b