Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர், 29 அக்டோபர் (ஹி.ச.)
ஹரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு இன்று (அக் 29) வருகை தந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார்.
ரபேல் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம் செய்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூரின் போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ரபேல் போர் விமானத்தின் பங்கு முக்கியத்துவமாக இருந்ததால், செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஏற்கனவே, 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரௌபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
இதனால், திரௌபதி முர்மு சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் நாட்டுத் தலைவர் ஆனார்.
தற்போது 2 வது முறையாக போர் விமானத்தில் திரௌபதி முர்மு பயணம் செய்து உள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b