Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 29 அக்டோபர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு பெண் இரண்டு பெண் கைக்குழந்தையுடன் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்ய போவதாக நிமிர் குழுவிற்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றி என்ன பிரச்சனை என்று கேட்டபோது குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு வாழ விருப்பமில்லை என்றும் அதனால் இரண்டு குழந்தைகளுடன் சாகப் போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
அவருக்கு சிறந்த முறையில் கவுன்சிலிங் வழங்கப்பட்டு நம்பிக்கையும் தைரியமும் கொடுத்து, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண உதவி செய்வோம் என உறுதி அளித்து நிமிர் குழுவினர்.
அந்த பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan