Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக அலுவலகத்தில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபினேஷை சந்தித்து விசிக தலைவர் வாழ்த்து தெரிவித்து, அவரை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத் தொகையாக 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.
அவரது பயிற்சியாளர் புவியரசிற்கு 10 ஆயிரம் ரூபாயை வழங்கி சிறப்பித்தார்.
மேன் மேலும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாடி பதக்கங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன் :-
அபினேஷ் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் அவரை பாராட்டுகிறோம், தந்தையை இழந்து எளிய குடும்ப பிண்ணனியில் இருந்து வந்தவர்.
அரசு கொடுத்த ஊக்கத்தொகையை கார்த்திகா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் 1 கோடி ரூபாயாக உயர்த்தி தரவும், இருவருக்கும் அரசு வேலை வாய்ப்பை உறுதி செய்யவும், வீடு ஒதுக்கீடு செய்யவும் முதல்வர் பரிசீலிக்க கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
Hindusthan Samachar / Durai.J