Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 29 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் அக்டோபர் முதல் வாரத்தில் திடீரென காட்டு யானை ஒன்று நுழைந்தது.
கோவிலுக்குள் யானை நுழைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் மற்றும் ஊடகங்களில் வெளியாகின. கோவிலுக்குள் உலாவிய இந்த யானை இரண்டு நாட்களில் இறந்து உள்ளது.
யானை இறந்ததற்கான காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை, இறந்த யானையின் உறுப்புகளை தடையவியல் ஆய்வுக்கு அனுப்பவில்லை, இறப்பு குறித்து தெரியப்படுத்தாமல் பிரேத பரிசோதனை செய்துவிட்டு பிணத்தை வனத்துறை புதைத்து விட்டதாக சென்னை கோட்டூர் கார்டன் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் முறையீடு செய்தார். இதை அடுத்து நீதிபதிகள் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வெளியான வீடியோக்களை பார்க்கும்பொழுது கோவிலுக்குள் நுழைந்த போது அந்த யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது தெரிகிறது.
யானை இறந்ததற்கான காரணம் குறித்து விபரங்கள் உடன் பிரேத பரிசோதனை அறிக்கை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
விசாரணை வருகிற நவம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan