தமிழ்நாட்டில் ₹888 கோடி ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது – அண்ணாமலை
சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச) மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து ஒரு ஊழலுக்குப் பிறகு இன்னொரு ஊழலில் சிக்கிக்கொண்டுள்ளது. இன்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அவர் பதிவிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள
Annamalai


Tweet


சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச)

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து ஒரு ஊழலுக்குப் பிறகு இன்னொரு ஊழலில் சிக்கிக்கொண்டுள்ளது.

இன்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அவர் பதிவிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போது அமலாக்கத்துறை (ED) மேலும் ஒரு மிகப்பெரிய ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது — இது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் 2,538 பணியிடங்களுக்கு பதவிக்காக பணம் வாங்கிய “பணியிட விற்பனை ஊழல்” ஆகும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2024 ஆரம்பத்தில் 2,538 பணியிடங்களுக்கு மொத்தம் 1.12 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. ஆனால், தகுதியும் கடுமையான உழைப்பும் கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுக்க முடியாததால் வாய்ப்பிழந்தனர். திமுக அரசின் பேராசையும் ஊழலும், இளைஞர்களின் கனவுகளையும் ஆசைகளையும் சிதைத்து விட்டது.

இந்த ₹888 கோடி ஊழல் தனித்த சம்பவமல்ல; மாறாக திமுக ஆட்சியின் அடையாளமாகி விட்ட அமைப்புசார்ந்த ஊழல் முறையின் தொடர்ச்சியாகும்.

இதில் மிகுந்த பரிதாபம் என்னவெனில் — தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே இந்தப் பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி நேரடியாக வழங்கினார். “வேலை வாய்ப்புகள் உருவாக்கம்” என பெருமைபடுத்திக்கொண்டபோதும், உண்மையில் அவை பணத்துக்காக விற்கப்பட்ட பதவிகள் என்று இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு பின்புலமாக ஹவாலா நெட்வொர்க்குகள் உட்பட பெரிய அளவில் ஊழல் வலையமைப்பு இயங்கியதாக ED தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஊழல் வலையமைப்பு நகராட்சி நிர்வாகத் துறையின் ஆழமான அமைப்புச் சார்ந்த ஊழலாக இருப்பதாக ED குறிப்பிட்டுள்ளது. இதை அவர்கள் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் மற்றும் அவரது நிறுவனமான True Value Homes (TVH) தொடர்பான வங்கிக் கடன் மோசடி வழக்கை விசாரிக்கும் போது கண்டுபிடித்துள்ளனர்.

திமுக ஆட்சியில் தொடர்ந்து வெளிப்படும் பெரிய ஊழல்கள், மு.க.ஸ்டாலின் அரசு உடனடி பொறுப்பேற்க வேண்டும் .

தமிழ்நாட்டின் மக்கள் நலனுக்காகவும், பணியிடங்களை ஏலத்தில் விற்ற இந்தக் கொடூர ஊழலில் தொடர்புடையவர்கள் தண்டனை பெறவும், நீதித்துறை மேற்பார்வையில் நடக்கும் ஒரு முழுமையான CBI விசாரணை மட்டுமே நீதி வழங்கும் வழியாகும்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ