Enter your Email Address to subscribe to our newsletters

தர்பங்கா, 29 அக்டோபர் (ஹி.ச.)
பீஹாரில் தர்பங்கா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(அக் 29) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
பீஹார் மாநிலம் பற்றி ராஷ்டிரிய ஜனதா தளம். நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அவதூறு செய்தது. அவர்கள் ஒட்டுமொத்த குடும்பம் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
ஒரு முன்னாள் முதல்வர் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டி இருக்கிறது. இது பீஹாரில் உள்ள ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்லவா? முன்னேறிய பீஹாரை உருவாக்க போகிறீர்களா? அல்லது காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்க போகிறீர்களா என்பதை மக்களே நீங்கள் அனைவரும் முடிவு செய்ய வேண்டும்.
தேர்தல் அறிக்கையை ஆர்ஜேடி வெளியிட்டு உள்ளது. பீஹாரில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இது சாத்தியமா? ராகுல், லாலு பிரசாத், தேஜஸ்வி ஆகியோர் தேர்தலில் உண்மையையே பேசமாட்டார்களா? ஏன் இப்படி பொய்களை சொல்கிறீர்கள்? மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்?
வக்ஃப் சட்டத்தில் திருத்தங்களை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் அவர்களால் அதை செய்ய முடியாது.
பாஜக சாதி மற்றும் மத அரசியலில் ஈடுபடுவதில்லை நாங்கள் நியாயமான மற்றும் தூய்மையான அரசியலைச் செய்கிறோம்.
நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் மாநிலத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓபிசி ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கியது ராகுல் காந்தி அல்ல, பிரதமர் மோடிதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b