Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று நேரம் இலவச உணவு வழங்க மூன்று ஆண்டுக்கு தனியார் நிறுவனத்திற்கு 180கோடியே 27லச்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஒப்புதல் பெற மன்ற கூட்டத்தில் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கப்படும் என கூறி சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது, முதல்கட்டமாக பரிச்சாத்த முறைமையில் சென்னை மாநகராட்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள 29ஆயிரத்தி 455 தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவசமாக உணவு வழங்க சென்னை மாநகராட்சி தனியாரிடம் ஒப்பந்தம் கோரியுள்ளது, இதில் Food Swing Enterprises நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு 180கோடியே 27லச்சத்தி 36ஆயிரத்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தினம் தோறும் காலை 166இடங்களிலும், மதியம் 285இடங்களிலும், இரவு 61 இடம் என அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மூன்று நேரமும் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள நிலையில் அதை இன்று நடைபெறும் மன்ற கூட்டத்தில் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ