Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை அம்பத்தூர் கலைவாணர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான அஸ்வின் ராஜ்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அஞ்சுமான் ITI ல் வெல்டராக முதலாம் ஆண்டு படித்து வரும் அஸ்வின் ராஜ், இன்று கல்லூரிக்கு செல்ல அம்பத்தூரில் இருந்து மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த போது.
சாணி குளத்திற்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இடையே கடக்கும் ஷோல்டர் பேக் மின் கம்பத்தில் பட்டு கீழே விழுந்துள்ளார்.
இதில்.வலது பக்க தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ