துணை ஜனாதிபதி பாதுகாப்பு வளையத்திற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் விஷயத்தில் போலிஸ் கூறுவது ஏற்க்க கூடியது அல்ல - வானதி சீனிவாசன
கோவை, 30 அக்டோபர் (ஹி.ச.) கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்ற சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள அட்டை வழங்கிய விழாவில் அந்த அமைப்பின் சார்பில் கலந்து கொண்டார். பாஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன். பின
Coimbatore MLA and BJP National Women’s Wing President Vanathi Srinivasan stated that the police explanation regarding the youths who trespassed into the Vice President’s security zone is unacceptable.


கோவை, 30 அக்டோபர் (ஹி.ச.)

கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்ற சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள அட்டை வழங்கிய விழாவில் அந்த அமைப்பின் சார்பில் கலந்து கொண்டார். பாஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன்.

பின்னர் செய்தியாளரிடம் பேசும்போது :

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா காலத்தில் சாலை வர வியாபாரிகள் வாழ்க்கைக்காக ஸ்வநிதி என்கின்ற தனியான திட்டத்தை கொடுத்ததாகவும், அதுவரை சாலையோர வியாபாரிகளுக்கு தனியாக எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும், ஸ்வநிதி என்ற திட்டத்தின் வாயிலாக எந்த ஒரு உத்தரவாதம் இல்லாமல், ரூபாய் பத்தாயிரம் முதலில் கடன் கொடுத்து, திருப்பி கட்டிய பிறகு ரூபாய் 25,000, 50,000 ஆயிரம் வரைக்கும் எந்தவித உத்திரவாதம் இல்லாமல் ஏழை - எளிய சாலையோர வியாபாரிகள் அந்த திட்டத்தில் பயன் பெற்று வருவதாகவும், அது மட்டுமல்ல இந்தியாவிலே அதிகமான பயனாளிகளை கொண்டு உள்ள மாநிலமாக தமிழகம் தான் அதிகமாக பயன்படுத்தி கொண்டு உள்ளதாகவும், அதனால் ஸ்வநிதி என்பது மிகப்பெரிய ஒரு ஊன்றுகோலாக இருக்கிறது என்றும், ஏழை - எளிய மக்களுக்கு மிகப்பெரிய ஊண்டுகோலாக உள்ளதாகவும் கூறியவர்,

நேற்று கோவையில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றதற்கு கோயமுத்தூர் சிட்டிசன் ஃபார்ம் என்ற ஒரு பொதுவான அமைப்பின் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் விமான நிலையம் முதல் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், ஏற்பாடு செய்து இருந்ததாகவும், நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக, துணை குடியரசுத் தலைவர் வர இருந்த சூழ்நிலையில் அங்கு இருந்த அத்தனை போக்குவரத்தையும் கட்டுப்படுத்தப்பட்டு, கட்சியினுடைய வரவேற்பு கொடுத்த தொண்டர்கள் கூட மிக தூரத்தில் நிற்க வைக்கப்பட்டு இருந்த சூழலில், இரண்டு நபர்கள் பாதுகாப்பு தடையை மீறி அவர்கள் வேண்டுமென்று உள்ளே அந்த நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்காக வந்து இருப்பதாக சந்தேகப்படுவதாகவும், காவல் துறை அதிகாரிகள் நேற்று மாலைக்குள் செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளனர். அதில் மது போதையில் வந்தவர்கள் செய்வது அறியாமல், அவர்கள் செய்தது போலவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும், கூறி உள்ளார்கள். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், அந்த பகுதி என்பது இதற்கு முன்பாக அவர் எம்.பி.யாக இருந்த காலத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடம், என்றும் அதுமட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சங்கமேஸ்வரர் கோவில் முன்பாக கார் வெடிகுண்டு விபத்து நடந்த இடம். அந்த இடத்திற்கு மிக அருகாமையில் இந்த மாதிரியான இரண்டு நபர்கள் ஒரு மிகப்பெரிய அரசியல் அமைப்பின் சட்டத்தின் உடைய உயர்ந்த பதவியில் இருக்கின்ற ஒரு நபருடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில், குறைபாடு இருப்பது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல, என்று இதற்காக கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், இங்கு நடைபெறுகிறது திராவிட மாடல் அரசு மீது எங்களுக்கு சந்தேகம் கூடுதலாக வருகிறது. என்றால், கார் வெடிகுண்டு விபத்தை கூட சிலிண்டர் வெடி விபத்து என்று தான் மாநிலத்தின் முதலமைச்சர் கூறினார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து எங்கு ? திட்டம் தீட்டப்பட்டது. எந்த அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்தும் கூட, வெளிப்படையாக மாநிலத்தினுடைய முதல்வர் கார் வெடிகுண்டு விபத்து பற்றி பேச மறுக்கிறார். அதை இப்பொழுது சிலிண்டர் விபத்து என்றும் தற்செயலான விபத்து போன்று தான் மூடி மறைத்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியவர், அதனால் எங்களுக்கு திராவிட மாடல் தமிழக அரசு உண்மையாகவே அவர்களின் மது போதையில் வந்து சென்றார்களா ? அல்லது வேறு ஏதேனும் சர்ச்சைகள் தீவிரவாத பயங்கரவாத சக்திகள் இதில் இருக்கிறதா ? என்று புலனாய்வு செய்து இவர்கள் உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் வழக்கம் போல மூடி மறைக்கின்ற வேலையில் ஈடுபடாமல், உண்மையான குற்றவாளிகள் அவர்கள் எந்த ? நோக்கத்திற்காக, வந்தார்கள் என்பது சரியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

காவல்துறையினர் பெயரைக் கூட வெளியிடவில்லை என்ற கேள்விக்கு

தி.மு.க அரசு இருப்பதால் தான் எங்களுக்கு சந்தேகம் பலமாக உள்ளது என தெரிவித்தார். குற்றவாளிகளின் பெயர்களை சொல்லவில்லை, அவர்கள் மீதி ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது நாங்கள் விசாரிக்கும் போது தெரிந்ததாக தெரிவித்தவர், அப்படிப்பட்ட பின்னணி இருக்கின்ற ஒரு நபர் எப்படி ? சர்வசாதாரணமாக வந்து செல்ல முடியும் ? என கேள்வி எழுப்பியவர், அதனால் இதற்குப் பின்னால் இருக்கின்ற உண்மையான திட்டத்துடன் அங்கு யார் ? வந்தார்கள் என்பதை கண்டுபிடித்து மக்களுக்கு இருக்கின்ற சந்தேகத்தை போக்க வேண்டியது அரசின் கடமை என்றார். துணை குடியரசுத் தலைவர் பத்து நிமிடங்களில் செல்லுகின்ற இடத்தில், அனைத்து போக்குவரத்தும் அந்தப் பகுதியில் தடை செய்யப்பட்டு, 30 அடிக்கு மேல் தான் செய்தியாளர்களே நிறுத்தி வைப்பதாகவும், ஆனால் எவ்வளவு தைரியம் இருந்தால், இவர்கள் போவார்கள், அவர்கள் போனது மட்டுமல்லாமல் காவல்துறை இந்த விஷயத்தில் ஏன் ? இவ்வளவு தூரம் வேறு மாதிரி திசை திருப்ப முயற்சிப்பதாக சந்தேகம் உள்ளதாக கூறினார்.

இன்று ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு காவல் துறை உண்மையை வெளியில் கொண்டு வரவில்லை என்றால். வேறுவிதமான சந்தேகம் இருந்தால், நிச்சயமாக மத்திய அரசின் உதவியை கூட நாங்கள் நேரடியாக பெறுவதற்கு வேலை செய்வோம் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / V.srini Vasan