Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், வரும் நவம்பர் 1-ந்தேதியில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நவம்பர் 01 ஆம் தேதி முதல் வால்பாறைக்கு வரும் வாகனங்களுக்கு ஈ - பாஸ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
எனவே சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களுக்கு ஈ - பாஸ் பெற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதோடு ஆழியாறு, சோலையார் சோதனை சாவடிகளிலும் ஈ - பாஸ் பெற முடியும். மேலும் ஈ - பாஸ் இல்லாத வாகனங்கள் வால்பாறைக்குள் அனுமதிக்கப்படாது. அதோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது.
சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருவதை கண்காணிக்க வருவாய்த்துறையினர், வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறையினர் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b