Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச)
முத்துராமலிங்க தேவரின் 118 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை ஒட்டி முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி,ஜெயக்குமார்,கோகுல இந்திரா,தம்பிதுரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,
முத்துராமலிங்க தேவர் புகழை போற்றும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ கவசத்தை வழங்கினார்.
கூட்டணி விவகாரத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு என்ன நிலைபாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாடுதான் தற்போதும் என்று தமிழக வெற்றிக் கழகம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு,
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைபாடு இருக்கும் அந்த நிலைபாட்டில் அவர்கள் இருக்கலாம்.இதை நீங்கள் அந்த கட்சியை தான் கேட்க வேண்டும்,என்னை கேட்க வேண்டிய அவசியம் கிடையாது.
நாட்டில் ஊழல் புரையோடி போயுள்ளது, 800 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் மறைவு.
செந்தில் பாலாஜி போல பல அமைச்சர்கள் திமுக அமைச்சரவையில் இருக்கிறார்கள். இளைஞர்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்ட நிலை. பணம் கொடுத்தால் தான் அரசுப்பணி என்கிற அளவுக்கு இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிட்டது
உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்று சொன்னால்,ED க்கு எதற்கு பயப்பட வேண்டும்...மடியில் கணமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?
கரூர் சம்பவத்தில் சென்னை அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறியது குறித்த கேள்விக்கு, இதை நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ