Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 30 அக்டோபர் (ஹி.ச.)
கோவையில் பேரூர், அருகே உள்ள செட்டிபாளையம் கிராமத்தில் மயானத்தை உடைத்து அத்துமீறி குப்பைகளை கொட்டும் பஞ்சாயத்து அலுவலர்களால், பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக, அதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்த பொதுமக்கள் .
கோவை, பேரூர் உட்பட்ட செட்டிபாளையம் ஊராட்சியில் சுற்று சுவர் எழுப்பி, பூட்டு போட்டு பராமரிக்கப்பட்டு வந்த மயானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி பஞ்சாயத்து அலுவலர்கள் அந்த சுற்று சுவரை இடித்து அதில் குப்பைகளை கொட்டுவதாகவும், மேலும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்தும் அங்கு வந்து குப்பைகளை கொட்டுகின்றனர் என்றும், சுற்றுச் சுவர் இடிந்து உள்ளதால், மர்ம நபர்கள் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொட்டுவதாக குற்றம் சாட்டும் அப்பகுதி பொதுமக்கள் . மேலும் இதனால் அருகில் உள்ள வாய்க்கால், சொட்டையாண்டி குளம் உள்ளது. இதில் இருந்து குறிச்சி, குனியமுத்தூருக்கு நீர்வழிப் பாதை செல்வதாகவும், அதில் மயானத்தில் போடப்படும் குப்பைகள் மற்றும் சமாதிகளை இடித்து வாய்க்காலில் தள்ளுவதால், வாய்க்காலில் செல்லும் நீர்வழிப் பாதை அடைப்பு ஏற்படுகிறது. குப்பை கழிவுகள் குளத்தில் கலக்குவதால் நிலத்தடி நீர் மாசு அடைந்து துர்நாற்றம் வீசுவதாகவும், மேலும் அப்பகுதி பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக அருகில் உள்ள கிராமம் பஞ்சாயத்துகள் போர் இருந்து தண்ணீர் வினியோகம் செய்கின்றனர்.
நிலத்தடி நீர் மாசடைந்த தண்ணீர் காரணமாக அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்ட உள்ளதாக கூறிய அவர்கள், மேலும் கேரளாவில் இருந்து மருத்துவ கல்லூரிகள் மர்ம நபர்கள் கொண்டு வந்து கொட்டுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
பஞ்சாயத்து அலுவலர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பும் போது தனியாக இடம் பிடித்துக் கொடுங்கள், அல்லது தனியாக கிணறு கொடுங்கள் என்று அலட்சியமாக கூறுவதாக வேதனை தெரிவித்தவர்கள்,
மயானத்தின் சுற்றுச்சுவரை இடித்து அத்துமீறி குப்பைகளை கொட்டுவதால் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் புகார் அளித்ததாகவும்,
மேலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan