Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 30 அக்டோபர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக, கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒருவரிடம் லஞ்ச பணம் பெறும்போது கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, சிறைச் சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN