Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 30 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் ஆளூர்.
இந்த கிராமத்தில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கதிர்வேல் என்பவருக்கும் சரோஜினி என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. கதிர்வேல் திருமணத்திற்கு பின்னர் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் புதுமண பெண்ணான சரோஜினி தீபாவளிக்கு தமது அம்மா வீட்டிற்கு கடந்த 24ஆம் தேதி தாலி பிரித்து கோர்ப்பதற்காக வந்துள்ளார்.
பின்னர் அம்மா வீட்டில் இருந்த வந்த சரோஜினி அவர்களது விவசாய நிலத்தில் உள்ள மாட்டிற்கு தீவணம் வைப்பதற்காக சென்றதாக சொல்லப்படுகின்றது.
விவசாய நிலத்திற்கு சென்ற சரோஜினி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் சரோஜினியை தேடிச் சென்ற போது விவசாய நிலத்தில் இருந்த 26 அடி ஆழம் கொண்ட கிணற்றில் நிலை தடுமாறி விழுந்தது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து உறவினர்கள் உடனடியாக திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் அங்கு வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு மீட்பு குழுவினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் சரோஜினியின் உடலை சடலமாக மீட்டுள்ளனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்த தகவல் இருந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரோஜினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் ஆகி மூன்று மாதங்களே ஆன நிலையில் தாலி பிரித்து கோர்ப்பதற்காக தாய் வீட்டிற்கு வந்த புதுமணப்பெண் தவறி விழுந்து கிணற்றில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN