கல்வராயன்மலை கவியம் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
கள்ளக்குறிச்சி, 30 அக்டோபர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கவியம், பெரியார். மேகம், சிறுகல்லூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக கள்ளக்குறிச்சி
Kaviyam Water Falls


கள்ளக்குறிச்சி, 30 அக்டோபர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கவியம், பெரியார். மேகம், சிறுகல்லூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது அந்த வகையில் கல்வராயன்மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக கல்வராயன்மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

இதே

போல் கவியம் நீர்வீழ்ச்சியும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் கவியம் நீர்வீழ்ச்சியில் குளிக்க போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், அங்கு சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்லவும் குளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN