Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 அக்டோபர் (ஹி.ச.)
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் மோடி இன்று முதல் 2 நாள் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இன்று மாலை ஏக்தா நகர், கேவாடியா செல்லும் அவர் எலக்ட்ரிக் பஸ் சேவைகளை தொடங்கி வைக்கிறார். மேலும், சுமார் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கியும், அடிக்கல்லும் நாட்ட உள்ளார்.
நாளை சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் வர்தார் வல்லபாய் படேலை நினைவு கூறும் வகையில் 150 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளார்.
தொடர்ந்து, பிஎஸ்எப், சிஆர்பிஎப் உள்ளிட்ட படையினரின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்கிறார்.
இந்த அணிவகுப்பின் போது, ஜார்க்கண்டில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் துணிச்சலை வெளிப்படுத்திய சிஆர்பிஎப் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் 21 பேருக்கு வீரதீர செயலுக்கான பதக்கங்களை வென்றவர்களும் கவுரவிக்கப்பட இருக்கின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM