Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 30 அக்டோபர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்
ஓபிஎஸ் அளித்த பேட்டியின் போது,
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் சன்னதியில் அம்மாவின் ஆட்சி புரட்சித்தலைவரின் ஆட்சி மீண்டும் உருவாக நாங்கள் சபதம் மேற்கொண்டுள்ளோம். எங்களோடு டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோரும் வந்துள்ளனர்.
திமுக ஆட்சியை அகற்றும் வரை நாங்கள் இணைந்து செயல்படுவோம் பசும்பொன்னில் உருவான இந்த கூட்டணி தொடரும் இவ்வாறு கூறினார்.
டிடிவி தினகரன் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில்,
புரட்சித்தலைவர் காலத்தை மூத்த நிர்வாகியான செங்கோட்டையனும் இப்போது வந்திருக்கிறார். அம்மா அவர்கள் பசும்பொன்னுக்கு வருவதற்கு முன்பு ஓபிஎஸ் செங்கோட்டையன் போன்றவர்கள் முன்னதாக வந்திருந்து, அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.
தற்போது அம்மாவின் தொண்டர்களை காப்பதற்காக எங்களோடு அவரும் வந்திருக்கிறார். மீண்டும் புரட்சித்தலைவர் ஆட்சி அம்மாவின் ஆட்சி வருவதற்கு செங்கோட்டையன் ஓபிஎஸ் ஆகியோருடன் சேர்ந்து பணியாற்ற இருக்கிறோம் என்று கூறினார்.
எடப்பாடிக்கு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, துரோகத்தை வீழ்த்தும் வரை நாங்கள் தொடர்வோம் என்று கூறினார்.
செங்கோட்டையன் இன்னும் அதிமுகவில் தானே இருக்கிறார் என்ற கேள்விக்கு, பதில் எதுவும் சொல்லவில்லை.
செங்கோட்டையன் ஏற்கனவே இங்கு வருவதாக கூறினார். இன்று வந்துவிட்டார். இதுதான் நடந்தது என்று கூறினார்.
சசிகலா அவர்களும் எங்களோடு வந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் கொஞ்சம் தாமதமாக புறப்பட்டதால் எங்களோடு சேர்ந்து கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் சசிகலாவின் மனம் எங்களுடன் தான் இருக்கும்.
அதிமுக எங்களுக்கு எதிரி கிடையாது எடப்பாடி மட்டும்தான் எங்களுக்கு எதிரானவர் அம்மாவின் தொண்டர்களாக நாங்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம் இவ்வாறு கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN