பசும்பொன் தேவர் நினைவிட வளாகத்தில் பசும்பொன்னில் சீமான் வேதனை
ராமநாதபுரம், 30 அக்டோபர் (ஹி.ச.) நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பசும்பொன்னில் உள்ள தேவர் திருமகனார் நினைவிடத்தில் தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள
Pasumpon Seeman


ராமநாதபுரம், 30 அக்டோபர் (ஹி.ச.)

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பசும்பொன்னில் உள்ள தேவர் திருமகனார் நினைவிடத்தில் தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியின் போது,

பசும்பொன் தேவர் திருமகனார் நினைவாலய வளாகப் பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிகளை கட்டக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்ததை அனைத்து கட்சிகளும் கடைபிடித்துள்ளனர்.

திமுக மட்டும் தான் கடைப்பிடிக்கவில்லை. திமுகவினர் தான் கட்சிக் கொடிகளை கட்டியுள்ளனர்.

இந்த ஆண்டோடு இந்த வளாகத்தில் கட்சி கொடிகள் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

ஓபிஎஸ் செங்கோட்டையனும் ஒரே காரில் வருவதாக கூறப்படுகிறது என்று கேட்டதற்கு அவர்கள் ஒரே கட்சிக்காரர்கள் தானே வந்தால் என்ன நீங்கள் தான் யாரையும் ஒன்றாக இருக்க விட மாட்டீர்களே என்று நகைச்சுவையாக பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN