Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 30 அக்டோபர் (ஹி.ச.)
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை செயல்படுத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இன்று (அக் 30) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக அதிமுக பாஜக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் திமுக காங்கிரஸ் இந்தியா கூட்டணி பிரதிநிதிகள் எஸ் ஐ ஆர் வேண்டாம் என்ற பதாகைகளை கையில் ஏந்தி கலந்து கலந்துகொண்டு திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எஸ் ஐ ஆர் க்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பாஜக அதிமுக தேமுதிக வெளியிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேசினார் இதில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
பாஜக சார்பில் பேசிய மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில்,
இதற்காக இந்தியா கூட்டணி கட்சியினர் எஸ்ஐ யாருக்கு பயப்படுகின்றனர் என்று தெரியவில்லை. அப்படி என்றால் தமிழகத்தில் உள்ள திமுக வெளியிட்ட கட்சிகள் கட்டமைப்பு இல்லையா அனைத்து கட்சி பூத்து ஏஜெண்டுகள் எஸ் ஐ ஆர் திருத்தத்தை கண்காணிப்பதற்கு உங்களிடம் ஆட்கள் இல்லையா ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் விட்டுவிடுவீர்களா எதற்காக எஸ் ஐ ஆர் ஐ கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்கள் என்று கூறினார்.
இதனால் பாஜகவிற்கும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் இடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அவர்களை சமாதானப்படுத்தி கூட்டத்தை நடத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகளின் கருத்துக்களை கேட்டறிந்து பதிவு செய்து கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b