Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 அக்டோபர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும்.
அந்த வகையில் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று (அக் 30) கொண்டாடப்படுகிறது.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் இன்று
(அக் 30) பதிவிட்டிருப்பதாவது,
இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன்.
நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.
கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b