Enter your Email Address to subscribe to our newsletters


மதுரை, 30 அக்டோபர் (ஹி.ச.)
கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கிடையில் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாறியதால் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் முன் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது.
அதுவரை பொதுவெளிக்கு வராத புஸ்ஸி ஆனந்த் அதன்பின் கட்சியினரின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.தற்போது, மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அக்கட்சி நிர்வாகிகள் இன்று (அக் 30) மரியாதை செலுத்தினர்.
இது தொடர்பாக தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் பகிர்ந்த எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில், தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது...
என்று குறிப்பிட்டுப் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b