Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 30 அக்டோபர் (ஹி.ச.)
உத்திர பிரதேசம் மாநிலம் பார்தாபூர் கிராமத்தில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 22 பேர், கவுடியாலா ஆற்றின் குறுக்கே லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தைக்கு செல்ல படகில் நேற்று மாலை (அக் 29) பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அப்போது படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் கிராம மக்கள் உதவியுடன் மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 60 வயது பெண் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். மேலும் ஐந்து குழந்தைகள் உட்பட எட்டு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் 13 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆற்றில் அதிக நீரோட்டம் காரணமாக படகு கவிழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் படகு ஒரு மரத்தில் மோதி கவிழ்ந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்.டி.ஆர்.எப் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபடுமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b